பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 64ஆவது தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு பவானி, கிருத்திகா, சபிதா ஆகிய 3 மாணவிகள் வெண்கலப் பதக்கம் வென்றனர். இவர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
பதக்கம் வென்ற மூன்று மாணவிகளுக்கும் தலா ரூபாய் ஒரு லட்சம் வீதம் ரூபாய் 3 லட்சம் பரிசுத் தொகையினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் முன்னிலையில் வழங்கினார்.
இந்தநிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் விளையாட்டு விடுதி மேலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்