பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் பூலாம்பாடியைச் சேர்ந்தவர் சோலைமுத்து (56). அவர் ஒப்பந்த அடிப்படையில் பூலாம்பாடி பேரூராட்சி தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிவந்தார்.
இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று காலை சோலைமுத்து பூலாம்பாடி கிராம ஏரிக்கரையில் தூய்மைப்பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு அவர் திடீரென கையில் வைந்திருந்த கிருமிநாசினியை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அதனைக் கண்டவர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை!