கரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை ஏழு பேர் கரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் தீவிர பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனிடையே வி.களத்தூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றும் அய்யாதுரை என்பவரின் தாய் அங்கம்மாள் (65) ஏப்ரல் 21ஆம் தேதி மாலை உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். தாயின் இறுதிச் சடங்கை முடித்த கையோடு அரைமணி நேரத்தில் கரோனா தடுப்பு தூய்மைப் பணியில் அய்யாதுரை ஈடுபட்டார்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "தாயை இழந்த சோகம் மறையும் முன்னரே, இறுதி சடங்கு முடித்துவிட்டு கரோனா பணியில் ஈடுபட்டது நெகிழ்ச்சி அளிக்கிறது. மக்களை காக்க வேண்டும் என்ற அவரது உயர்ந்த எண்ணத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் தலை வணங்குகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: துப்புரவுப் பணியாளர் தாய் உயிரிழப்பு - இறுதிச் சடங்கு முடித்தவுடன் பணிக்குச் சென்ற கடமை