வேப்பூர் புது காலனியை சேர்ந்தவர் பாண்டியன்.இவரது மகன் சக்திவேல் உறவினர்கள் 6 பேருடன் வேப்பூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தார். இச்சிலி குட்டை என்ற இடத்தில் எதிரே வந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் இரண்டு வயது குழந்தைகள் செம்நிலா, நந்திதா உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் தனம் என்பவர் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற சக்திவேல், தமிழ்நிலா ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காரை ஓட்டி வந்தவர், கோவில்பாளையத்தை சேர்ந்த சரவணன் என்பதும், மதுபோதையில் இருந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தொகுதிப் பங்கீடு: விஜயகாந்தை சந்தித்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!