மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சிறுவர் சிறுமியர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு குவிந்தனர்.
இதையடுத்து, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிறுவர் சிறுமிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர். இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: ஒப்பாரி வைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!