உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிற கரோனா தொற்றால் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே நகர்ப்புற பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மின் நகர், அரனாரை, துறைமங்கலம் 4 ரோடு, மதன கோபாலபுரம், ரோவர் வளைவு, கல்யாண் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால், நகர்ப்புறத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நகராட்சி, சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
இதுவரை 422 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 257 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 162 பேர் பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.