ETV Bharat / state

உச்ச நீதிமன்றம் குறித்து அவதூறு பேச்சு: பத்ரி சேஷாத்ரி கைது - அண்ணாமலை கண்டனம்!

author img

By

Published : Jul 29, 2023, 11:09 AM IST

Updated : Jul 29, 2023, 12:21 PM IST

மணிப்பூர் வன்முறை மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை அவதூறாக பேசிய பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டு உள்ளார்.

பத்ரி சேஷாத்ரி கைது
Badhrisheshathiri arrested

பெரம்பலூர்: மணிப்பூர் வன்முறை மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் அவதூறாக பேசியதாக பத்ரி சேஷாத்ரியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை அவரை சென்னையில் கைது செய்து, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளது. “மணிப்பூரில் கொலை நடக்கத்தான் செய்யும், தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன செய்ய முடியும், அவரிடம் துப்பாக்கியைக் கொடுத்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம்” என பத்ரி சேஷாத்ரி பேசி இருந்ததாக அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும், இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரியும் ப கவியரசு அளித்த புகாரில், “நான் பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறேன். நான் பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 26ஆம் தேதி அன்று மாலை யூடியூப் நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஜூலை 22ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ ஒன்றில் யூடியூப் சேனலின் நெறியாளரும், பத்ரி சேஷாத்திரி என்பவரும் உரையாடிக் கொண்டிருந்தனர். அந்த வீடியோ 58 நிமிடம் 5 விநாடிகள் ஓடக்கூடியது.

அந்த வீடியோவில் 48வது நிமிடம் 10 விநாடியில் மேற்படி உரையாடிய பத்ரி சேஷாத்திரி என்பவர், ‘உங்களால் ஏதும் செய்ய முடியாவிட்டால் நாங்கள் இறங்கி செய்கிறோம். நாம் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் கையில் துப்பாக்கியைக் கொடுத்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம். அங்கு அமைதியை கொண்டு வர முடியுமா? அது மலைப்பாங்கான பகுதி. அங்கு கொலை நடக்கத்தான் செய்யும்’ என கூறியுள்ளார்.

இவரது பேச்சானது இரு தரப்பு மக்களிடையே அமைதியை குலைக்கும் விதமாகவும், வன்முறையை தூண்டிவிடும் வகையில் அமைந்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதியை அவர் ஏளனமாக பேசி உள்ளார். இந்த வீடியோவை பார்த்த நான், மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். ஆகையால், பத்ரி சேஷாத்திரி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நிலையில்தான், பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டு உள்ளார். இதனையடுத்து, பதிப்பாளரும், அரசியல் ஆர்வலருமான பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் பத்ரி சேஷாத்ரியை தமிழக காவல் துறை இன்று அதிகாலை கைது செய்துள்ளதை தமிழ்நாடு பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது.

  • புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் திரு @bseshadri அவர்களை தமிழக காவல்துறை இன்று அதிகாலை கைது செய்துள்ளதை @BJP4TamilNadu வன்மையாகக் கண்டிக்கிறது.

    சாமானிய மக்களின் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்று கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு.

    ஊழல்…

    — K.Annamalai (@annamalai_k) July 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சாமானிய மக்களின் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்று கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு. ஊழல் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஒன்று மட்டும்தான் தமிழக காவல் துறையின் பணியா?” என தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: மணிப்பூர் கலவரத்தில் ‘மியான்மர்’.. உண்மை நிலவரம் என்ன?

Last Updated : Jul 29, 2023, 12:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.