பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகேயுள்ள அய்யலூர் சாலையில் நேற்று மாலை முட்புதரில் கிடந்த சாக்கு மூட்டை ஒன்றில் பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டதுள்ளது. அப்போது அவ்வழியே சென்ற பொதுமக்கள் பச்சிளம் குழந்தை அழும் சத்தத்தைக் கேட்டு மூட்டையை பிரித்து பார்த்தபோது பிறந்து சிலமணி நேரமேயான ஆண் குழந்தை ஒன்று இருந்தது.
இதனையடுத்து உடனடியாக அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அங்கு வந்த அவசர ஊர்தியில் பச்சிளம் குழந்தை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அப்பச்சிளம் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. குழந்தை முட்புதரில் கண்டெடுக்கப்பட்ட செய்தியிலிருந்தே மீளாத மக்கள், உயிரிழந்த செய்தியைக் கேட்டு சோகத்தில் ஆழ்ந்தனர்.