பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையைச் சேர்ந்த பவித்ரா என்பவர் பெரம்பலூரில் செயல்பட்டு வந்த ஸ்காட்ஸ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் பணத்தை கட்டி ஏமாந்துவிட்டதாக, பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த நிறுவனத்தைச் சேர்ந்த சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், சிவசங்கரி மற்றும் பெரம்பலூர் மாவட்டம், பென்னகோணம் பகுதியைச்சேர்ந்த சரத்குமார் ஆகிய மூவர் பவித்ரா மட்டுமல்லாமல், பல நபர்களிடம் பண மோசடி செய்தததும், மொத்தம் 2 கோடியே முப்பது லட்சம் ரூபாயை ஏமாற்றியுள்ளனர் என்பதும் தெரிய வந்தது.
இதனிடையே இந்த வழக்குத் தொடர்பாக மாவட்ட குற்றப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் தலைமையிலான குழு சென்னையில் இருந்த சிவசங்கரி என்பவரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த வழக்குத் தொடர்பு மேலும் இருவரைத் தேடி வருகின்றனர். பண மோசடி சம்பவம் பெரம்பலூரில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு - பெற்ற மகள் மீது ஆசிட் வீசிய தந்தை கைது!