ETV Bharat / state

வேண்டுதலை நிறைவேற்றும் அம்மாயி, தாத்தா வழிபாடு - அம்மாயி தாத்தா வழிபாடு

பெரம்பலூர் அருகே பெண்கள் கும்மியடித்தும், நேர்த்திகடன் செலுத்தியும் அம்மாயி, தாத்தா வழிபாடு நடத்தினர்.

வேண்டுதலை நிறைவேற்றும் அம்மாயி தாத்தா வழிபாடு

author img

By

Published : Jan 27, 2021, 11:17 AM IST

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் கிராமத்தில் ஆண்டுதோறும் அம்மாயி, தாத்தா வழிபாடு தை மாதம் பொங்கல் பண்டிகை முடிந்து 8ஆவது நாள் அல்லது 15ஆவது நாளில் நடத்தப்படும் விழாவாகும். இந்த ஆண்டுக்கான வழிபாடு இன்று(ஜன.26) நடைபெற்றது.

செட்டிகுளம் கிழக்கு தெருவில் கீற்றுப் பந்தல் அமைக்கப்பட்டு களிமண்ணால் ஆன அம்மாயி - தாத்தா சிலைகள் வைக்கப்பட்டு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பெண்கள் கும்பி அடித்து வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து வழிபாடு செய்யப்பட்ட "அம்மாயி - தாத்தா" சிலைகளை சிறுமிகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று அருகில் உள்ள செவிங்கி குளத்தில் வழிபாட்டிற்கு பிறகு கரைப்பர். கிராம மக்கள் தாங்கள் வாங்கும் புதிய தங்க நகைகளை வழிபாடு செய்யப்படும் அம்மாயி தாத்தா சிலைகளுக்கு அணிவிப்பர். திருமணம் நடைபெற குழந்தை பாக்கியம் பெற, செல்வம் சேர்வதற்காக மண் சிலைகளுக்கு இவ்வழிபாடு செய்கின்றனர்.

வேண்டுதலை நிறைவேற்றும் அம்மாயி தாத்தா வழிபாடு

குளத்தில் கரைக்கப்படும் மண்ணை குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் மடிப்பிச்சை ஏந்தி பெற்றுச் செல்வர். வேண்டுதல் நிறைவேறிய பெண்கள், வட மாலை சாத்துதல் மற்றும் இனிப்பு வகைகளை படையலிடுதல் உள்ளிட்டவை மூலம் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றுவர்.

கிராமப்புறங்களில் மக்களின் தெய்வ நம்பிக்கைக்கு இது போன்ற மண் மணம் மாறாத வழிபாடு என்றும் சான்றாக உள்ளது. இந்த நிகழ்வில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.