பெரம்பலூர் மாவட்டம் திம்மூர் கிராமத்தில் செப்டம்பர் 16ஆம் தேதி 100 நாள் வேலைத்திட்டத்தின் போது டிராக்டர் மோதி ஜெயலட்சுமி என்ற பெண் உயிரிழந்தார்.
இந்நிலையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின்போது, உயிரிழந்த ஜெயலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், ஜெயலட்சுமியின் கணவர் சீனிவாசனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ஜெயலட்சுமியின் குழந்தைகள் இருவரின் கல்வி செலவுகளை அரசே ஏற்க வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
அதுமட்டுமல்லாது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அதன்பின் காவல்துறையினர், வருவாய் துறையினர் பேச்சுவார்த்தைக்கு பிறகு தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஜெயலட்சுமி குடும்பத்திற்கு ரூபாய் 50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் லாசர் உள்ளிட்ட அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி தர்ணா போராட்டம்!
பெரம்பலூர்: 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் போது உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.