ETV Bharat / state

அதிமுகவில் இணையும் அமமுகவினர்- வலுவிழக்கும் டிடிவி - பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம்

பெரம்பலூர்: குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட செந்துறை ஒன்றிய அமமுகவின் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

ammk parties
author img

By

Published : Sep 25, 2019, 4:59 PM IST

பெரம்பலூர் அதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில் குன்னம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட செந்துறை ஒன்றிய அமமமுகவின் கழகச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.

அதிமுகவில் இணைந்த அமமுகவினர்
அதிமுகவில் இணைந்த அமமுகவினர்

பெரம்பலூர் மாவட்டக் கழகச் செயலாளரும், குன்னம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். மே மாதத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் அமமுக தோல்வியை தழுவி கடும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. அமமுக வலுவிழந்து காணப்படுவதை உணரும் அக்கட்சியின் தொண்டர்கள் மீண்டும் அதிமுக பக்கமே செல்வதாக கூறப்படுகிறது.

மேலும், ஊர் ஊராக கூட்டம் போட்டு டிடிவி தினகரன் பிரசாரம் செய்துவந்தாலும் அமமுக 2021ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தாக்குபிடிக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Intro:குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செந்துறை ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் செந்தில்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் செந்துறை ஒன்றியம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கலைத்துவிட்டு அதிமுகவில் இணைந்தனர்

Body:பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செந்துறை ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கலைத்துவிட்டு பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்டி ராமச்சந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்

Conclusion:இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.