தமிழ்நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவிவரும் சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவருகின்றது. மேலும் ஏப்ரல் மாதத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000, நியாயவிலைக்கடை பொருள்கள் வழங்கப்பட்டன்.
இதனிடையே கடந்த மாதம் 27ஆம் தேதியன்று (27-04-2020) வெளிவந்த ஜூனியர் விகடன் வார இதழின், மிஸ்டர் கழுகு என்ற தலையங்கத்தில் "ஒத்துழைக்காத அதிகாரிகள் - கரோனா குளறுபடிகள் - திணறும் எடப்பாடி” என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு பற்றியும், அரசு அலுவலர்கள் பற்றியும் பொய்யான செய்திகளை வெளியிட்டதாக அதிமுகவின் பெரம்பலூர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாவட்டச் செயலாளர், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜூனியர் விகடன் வார இதழ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தார். அப்போது, அதிமுக அம்மா பேரவை நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் ஒரேநாளில் 20 பேருக்கு கரோனா: தனிமைப்படுத்தப்பட்ட 11 கிராமங்கள்!