பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு பயிலும் சிறுவன் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகர் அளித்தனர்.
அதன் அடிப்படையில் பாலியல் துன்புறுத்தல் செய்த 16 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.