ETV Bharat / state

பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தில் செயல்படும் கல்குவாரியில் பாறை சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு - கல்குவாரியில் பாறை சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே உகுவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். குவாரியை தற்காலிகமாக சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கல்குவாரியில் பாறை சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

author img

By

Published : Jul 29, 2022, 2:22 PM IST

பெரம்பலூர் அருகே கவுள்பாளையம் கிராமத்தில் உள்ள குவாரியில் மேலாளராக வேலை பார்த்துக் கொண்டிருப்பவர் சுப்பிரமணி(48). இன்று(ஜூலை.29) காலை குவாரியில் உள்ள பள்ளத்தில் லாரிகளில் லோடு ஏற்றுவதற்காக கீழே இறங்கி கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அங்கு வந்த லாரி டிரைவர் ரெங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார், சுப்பிரமணியிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென குவாரியில் பாறை சரிந்து விழுந்துள்ளது. இதில் சிக்கிக்கொண்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை அகற்றி சுப்பிரமணி மற்றும் செந்தில்குமார் ஆகியோர் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

கல்குவாரியில் பாறை சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

விபத்து குறித்து விசாரணை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடப்பிரியா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அனுமதி பெற்று இயங்கும் கல்குவாரியை தற்காலிகமாக சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

குவாரியில் பாறை சரிந்து விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவம், உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: இரு சக்கர வாகனம் மீது மோதிய லாரி - நூலிழையில் உயிர் தப்பிய இரு பெண்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.