நாமக்கல் பரமத்தி சாலையில் சுப்பிரமணி என்பவர் எலக்ட்ரிக்கல்ஸ் கடை நடத்தி வருகிறார். இன்று (ஏப்.17) காலை கடைக்கு மின்மோட்டார்கள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் லாரியில் வந்தன. அவற்றை கடையின் ஊழியர்கள் இறக்கி வைத்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவர் சாலை ஓரத்தில் இறக்கி வைக்கப்பட்ட மின் மோட்டாரை திருடிக்கொண்டு ஓட முற்பட்டார்.
இதனைக் கண்ட கடை உரிமையாளரும், அவ்வழியாக சென்ற பொதுமக்களும் திருடனை பிடித்து கட்டி வைத்து நாமக்கல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு சென்ற காவல் துறையினர், அந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர், பரமத்திவேலூரை அடுத்த மாணிக்கநத்தம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: வடுகபட்டியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துகிடந்த 9 மயில்கள்