ETV Bharat / state

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை - என்னவானது ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா? - ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 9, 2023, 10:06 PM IST

நாமக்கல்: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. கடந்த மாதம் ஆன்லைன் ரம்மியில் மூன்று லட்ச ரூபாய் பணத்தை இழந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மியால் மற்றொரு உயிர் பலியாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த ரியாஸ் என்ற இளைஞர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இன்று(பிப்.9) வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்ற ரியாஸ், பாலத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு திடீரென காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இளைஞர் குதித்ததைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் மீனவர்கள் உதவியுடன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். ரியாஸ் ஆற்றில் குதித்ததை அறிந்து அங்கு வந்த அவரது தாயார் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

சுமார் இரண்டு மணி நேரம் கழித்து ரியாஸின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இது தொடர்பான போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததன் காரணமாகவே ரியாஸ் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்தது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்ட மசோதா நிறைவேற்றியும், அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால் இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து வருவதாக திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியில் ரூ.3 லட்சம் இழப்பு; தூத்துக்குடி இளைஞர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.