நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவிற்குள்பட்ட ஏழு காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் கரோனா தொற்று காலங்களில் இரவு பகல் பாராமல் மன அழுத்த சுமையுடன் பணியாற்றிவருகின்றனர்.
அவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும்விதமாக மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சுஜாதா தலைமையில் யோகா பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்தப் பயிற்சி வகுப்பில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு மனவளக்கலை, யோகா பயிற்சிக் கலையை யோகா ஆசிரியர்கள் ரமேஷ், கஸ்தூரி ஆகியோர் அளித்தனர். இந்தப் பயிற்சி பரமத்திவேலூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அளிக்கப்பட்டது.
யோகப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட காவல் துறையினர் கூறுகையில், "மன அழுத்தம் குறைந்து உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு புத்துணர்ச்சியாக உள்ளது. இதைத் தொடர்ந்து தங்கள் குடும்பத்தினருடனும் பணி ஓய்வு நேரங்களிலும் காலை, மாலை இருவேளை செய்யவுள்ளோம்" எனக் கூறினர்.
காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி - காவல்துறையினருக்கு யோகா பயிற்சி வகுப்புகள்
நாமக்கல்: பரமத்திவேலூர் காவல் துறையினரின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக யோகா பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
![காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி யோகா பயிற்சி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:28:56:1602327536-tn-nmk-03-paramathivelur-police-yoga-class-script-vis-7205944-10102020162312-1010f-1602327192-945.jpg?imwidth=3840)