ETV Bharat / state

மதுபோதையில் ஆம்புலன்சுக்கு போன் செய்த கணவரை வெளுத்து வாங்கிய மனைவி!! - namakkal

நாமக்கல் அருகே மதுபோதையில் 108 ஆம்புலன்ஸை அழைத்த கணவரை நய்யப்புடைத்த மனைவியால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுபோதையில் ஆம்புலன்சுக்கு போன் செய்த கணவரை வெளுத்து வாங்கிய மனைவி

author img

By

Published : Jan 13, 2023, 1:44 PM IST

மதுபோதையில் ஆம்புலன்சுக்கு போன் செய்த கணவரை வெளுத்து வாங்கிய மனைவி

நாமக்கல்: சிட்கோ காலனியை சேர்ந்த முருகேசன்(55) என்பவர் குடிபோதையில் இன்று காலை சாலை விபத்தில் அடிபட்டு விட்டதாக கூறி அவரே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார். நாமக்கல் திருச்சி சாலையில் இருந்து விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதித்த போது அவர் குடிபோதையில் இருப்பதும் எந்த வாகனமும் இடித்த காயமும் ஏற்படவில்லை என்றும் அறிந்தனர்.

இதற்கிடையில் அவருடைய மனைவி அங்கு வந்து ஏன் 108 ஆம்புலன்ஸை அழைத்தாய்? அவர்கள் உயிர் காக்கும் சேவகர்கள். அவர்கள் மற்றவர்களுக்கு சேவை செய்யும் நேரத்தை நீ ஏன் குடிபோதையில் வீணடிக்கிறாய் என கணவனுக்கு தர்ம அடி கொடுத்துள்ளார்.

அவரது மனைவி முருகேசனை நய்யப்புடைத்ததால் முருகன் தலை தெறிக்க ஓடினார். இந்த காட்சிகள் அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: ராசிபுரத்தில் அதிமுக நிர்வாகியின் வாகனங்களுக்கு தீவைப்பு.. நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.