நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூர்நாடு பகுதியைச் சேர்ந்தவர், சிவனேஷ். இவர் தனது நண்பர்களான ஜெய்சங்கர், கோபிநாத்துடன் சரக்கு வேனில் வீட்டு உபயோக பொருட்களை ஏற்றிக்கொண்டு கொல்லிமலையில் இருந்து நாமக்கல்லுக்கு வந்திருக்கிறார்.
இவர்கள் பயணித்த வேன் கொல்லிமலையில் உள்ள 32ஆவது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் ஓட்டுநர் மற்றும் உடன் வந்த இருவரும் நல்வாய்ப்பாக எந்தவிதமான காயமுமின்றி தப்பினர்.
இந்த விபத்தில் வேனில் இருந்த பொருள்கள் சிதறி விழுந்தன. இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த வாழவந்தி நாடு போலீசார் கிரேன் உதவியுடன் சரக்கு வேனை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர். இதனால் கொல்லிமலை செல்லும் பாதையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: காவல்துறையினரின் பேருந்து மோதி சரக்கு வாகன ஓட்டுநர் உயிரிழப்பு!