உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பெருந்தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் வரும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் அனைவரும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் சுல்தான் பேட்டையில் செயல்பட்டுவரும் ஜெயக்குமார் ஸ்டோர், கார்த்திகை டிரேடர்ஸ் உள்ளிட்ட இரு மளிகைக் கடைகளிலும் இன்று காலை முதல் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்துள்ளனர்.
இதை பார்த்த வருவாய் துறையினர் இரு மளிகைக் கடைகளை எச்சரித்து சென்றனர். இருப்பினும், அந்த இரு கடைகளும் தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் பொருள்களை மீண்டும் விற்பனை செய்துவந்ததால் பரமத்தி வேலூர் வட்டாட்சியர் செல்வராஜ், காவல் துறை துணை கண்காணிப்பாளர் பழனிசாமி ஆகியோர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
இதையும் படிங்க: அடையாள அட்டை இல்லாமல் சுற்றிய 50 பேரிடம் அபராதம் வசூல்