ETV Bharat / state

'ஆட்சி என்ற பெயரில் நடைபெறும் அட்டூழியத்துக்கு மக்கள் தேர்தலில் பதில் சொல்வார்கள்' - டிடிவி தினகரன் - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

நாமக்கல்: ஆட்சி என்ற பெயரில் நடைபெறும் அட்டூழியம் அனைத்துக்கும் தேர்தலில் மக்கள் பதில் சொல்வார்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

http://10.10.50.85:6060/reg-lowres/17-February-2021/tn-nmk-01-ammk-ttv-dinakaran-script-vis-tn10043_17022021184230_1702f_1613567550_608.mp4
டிடிவி தினகரன்
author img

By

Published : Feb 17, 2021, 8:58 PM IST

நாமக்கல்லில் அமமுக துணைத் தலைவர் திரு. அன்பழகன் இல்ல திருமண விழாவில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "சசிகலா வெளியில் வந்தால் மாற்றம் வரும் என யாரும் சொல்லவில்லை. ஊடகங்கள்தான் தெரிவித்தன. கரோனா சிகிச்சைக்கு பின் மருத்துவர்கள் சசிகலாவை ஓய்வு எடுக்கச் சொன்னதால்தான் அவர் ஓய்வெடுத்து வருகிறார். ஓய்வு முடிந்த பிறகு வெளியே வருவார்.

திமுகதான் எங்களுக்கு தீய சக்தி, அரசியல் எதிரியான திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடர்ந்து செயல்படும். எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீண்டும் வரும் என மக்கள் நினைக்கவில்லை.

தமிழ்நாடு முழுவதும் அமமுக வலுவாக உள்ளது. குறைவான தொண்டர்கள் உள்ளதாக பொய் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் எங்களை மீறி அரசியலில் யாரும் எதையும் செய்துவிடமுடியாது.

டிடிவி தினகரன்
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்துள்ளது என்பது உண்மைதான். ஆட்சி என்ற பெயரில் நடைபெறும் அட்டூழியம் எல்லாவற்றுக்கும் தேர்தலில் மக்கள் பதில் சொல்வார்கள். அமமுக சார்பில் விருப்ப மனு வாங்கப்படும். வேட்பாளர்கள் குறித்து மாவட்ட, மண்டல பொறுப்பாளர்கள் மூலம் தீர்மானிக்கப்படும். தேர்வுக்கு மாணவன் எவ்வாறு தயாராகிறானோ, அவ்வாறு தேர்தலுக்கு அமமுக தொண்டர்கள் தயாராக இருக்கின்றார்கள்.

அதிமுகவை அமமுக ஜனநாயக முறைப்படி மீட்டெடுக்கும். கட்சி தொடங்கியதிலிருந்தே இதனை கூறி வருகின்றோம். சசிகலா அதிமுகவை மீட்க சட்ட ரீதியாக போராடிவருகிறார். இதில் எந்த குழப்பமும் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சரின் நான்கு ஆண்டுகால ஆட்சிக்கு தேர்தலில் தமிழ்நாடு மக்கள் பதில் சொல்வார்கள்" என்றார்.

இதையும் படிங்க: சசிகலாவை சந்திக்க வாய்ப்பில்லை: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திட்டவட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.