நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு ஓவியர்கள் பேரவை, காவல்துறை சார்பில் கரோனா தடுப்பு பணியாளர்களுக்கு பாத பூஜை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் திருச்செங்கோடு எம்.எல்.ஏ. பொன் சரஸ்வதி கலந்துகொண்டார்.
அதையடுத்து அவர், அப்பகுதியில் கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள், காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்களை பாராட்டும் விதமாக மலர்கள் தூவி காலில் விழுந்து வணங்கினார். அதையடுத்து அங்கு கரோனா விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில், கரோனா விழிப்பணர்வு வாசகங்கள் அடங்கிய பிரமாண்ட ஓவியம் வரையப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களுக்கு பாஜக சார்பில் பாத பூஜை!