ETV Bharat / state

கொல்லிமலை நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை! - Tourists are not allowed falls

கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து மாவட்ட வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

கொல்லிமலை நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

author img

By

Published : Nov 11, 2022, 1:06 PM IST

நாமக்கல்: காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில், அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக நாமக்கல், மாவட்டம் கொல்லிமலையில் உள்ள செம்மேடு, ஆரியூர் நாடு, வாளவந்திநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி உள்ளிட்ட அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து மாவட்ட வனத்துறை உத்தரவிட்டுள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

குறிப்பாக கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை காண சுமார் 1500 படிக்கட்டுகளை கடந்து தான் அருவிக்கு செல்ல முடியும். தொடர்ந்து பெய்து வரும் மழையால் அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

மழையால் படிக்கட்டுகள் பாசன் பிடித்துள்ளதால் அதில் செல்லுபவர்கள் விழக்கூடும் என்பதால் கொல்லிமலையில் உள்ள அருவிகளுக்கு 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் இந்த தடையானது நீட்டிக்க வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க: எல்லையில் கேரளா டிஜிட்டல் நில அளவை மேற்கொள்கிறதா என கண்காணிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.