ETV Bharat / state

பொய் பரப்புரை மேற்கொள்ளும் திமுக - காங்கிரஸ் கூட்டணி - தமாகா குற்றச்சாட்டு!

நாமக்கல்: திமுக - காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் பொய் பரப்பரை செய்து வருகின்றன என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் யுவராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்

பொய் பரப்புரை மேற்கொள்ளும் திமுக- காங்கிரஸ் கூட்டணி
author img

By

Published : Mar 28, 2019, 4:12 PM IST

நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் யுவராஜ் பரப்புரை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஏப்ரல் 1-ஆம் தேதியில் தஞ்சாவூரில் தங்கள் கட்சி தலைவர் ஜி.கே வாசன் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை வெளியிட உள்ளோம். அந்த அறிக்கையில் தஞ்சை நெற்களஞ்சியம் பாதுகாக்கப்படும் என்றும் உறுதி மொழியை கொண்டதாக இருக்கும் " என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்," தங்கள் கட்சியின் தலைவர் உடன் சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தபோது 8 வழி சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் அதற்கு தமிழக முதல்வர் விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டமும் தமிழகத்தில் வராது என்று உறுதி அளித்தார். அதன் அடிப்படையிலேயே தான் தாங்கள் கூட்டணி வைத்துள்ளோம் " என தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிமதி ஆறுமுகசாமி ஆணையம் தெளிவான விசாரணையை நடத்தி வரும் நிலையில், திமுக எம்மாதிரியான விசாரணை நடத்தப் போகிறது என கேள்வி எழுப்பினார். மொத்தத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் பொய் பரப்புரை செய்கின்றனர் என்று அவர் குற்றம்சாட்டினார்.

Intro:முதலமைச்சர் 8 வழி சாலை திட்டத்தை ரத்து செய்வேன் என்று கூறியது தான் கூட்டணி அமைப்போம் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் சிவராஜ் பேட்டி

Body:திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றன என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் யுவராஜ் நாமக்கல் பேட்டி அளித்துள்ளார்.

இன்று அதிமுக வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து நாமக்கல்லில் பிரச்சாரம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் யுவராஜ் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வருகின்ற ஏப்ரல் 1-ஆம் தேதியில் தஞ்சாவூரில் தங்கள் கட்சி தலைவர் ஜி கே வாசன் தங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை வெளியிட உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி மற்றும் தஞ்சை நெற்களஞ்சியம் பாதுகாக்கப்படும் என்றும் உறுதி மொழியை கொண்டதாகவும் கொண்டதாக இருக்கும் என்று நாமக்கலில் செய்தியாகவே பேட்டியளித்தார்.

மேலும் தங்கள் கட்சியின் தலைவர் உடன் சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தபோது 8 வழி சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் அதற்கு தமிழக முதல்வர் விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டமும் தமிழகத்தில் வராது என்று உறுதி உறுதி அளித்தால் அதன் அடிப்படையிலேயே தான் தாங்கள் கூட்டணி வைத்ததாகவும் கூறினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்மம் குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தாங்கள் வந்தவுடன் உடனடியாக முதல் வேலையாக வழக்கை விசாரித்து குற்றவாளிகளை சிறையில் அடைப்போம் என்கிறார் என்ற கேள்விக்கு அவர் சாதிக்பாட்சாவின் மரணம் பற்றியோ வேறு மரணங்கள் குறித்து ஏன் பேசுவதில்லை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து நீதிமதி ஆறுமுகசாமி ஆணையம் தெளிவான விசாரணையை நடத்தி வருகிறது. அந்த விசாரணையும் நம்பாத திமுக அவர்கள் வந்து வேறு எம்மாதிரியான விசாரணை நடத்தப் போகிறார்கள் என கேள்வி எழுப்பினார். அப்படியானால் திமுக ஒருவரது மரணத்தை வைத்து அரசியல் செய்து ஓட்டு கேட்கும் நிலையில் உள்ளதா எனவும கேள்வி எழுப்பினார். திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மரணம் குறித்து பேசவில்லை என வினாவினர்.

கங்கிரஸ் ஆட்சியை விட நாடு பிரதமர் மோடி ஆட்சியில் பாதுகாப்புடன் உள்ளது.
மதச்சாயம் பூசுவதை தடுக்க வேண்டும். மொத்தத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் பொய் பிரச்சாரம் செய்கின்றனர் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் யுவராஜ் குற்றம்சாட்டினார்.

Conclusion:மக்கள் அதிமுக கூட்டணிக்கே நிச்சயம் வாக்களிப்பார்கள் என தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.