ETV Bharat / state

'எங்கேயும் காதல்' - சாதி, மதம், மொழி, நாடு கடந்து வென்ற தமிழரின் காதல்

நாமக்கல்: திருச்செங்கோட்டைச் சேர்ந்த இளைஞருக்கும், சுவீடன் நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி காதல் திருமணம் நடைபெற்றது.

Hindu marriage with foreign girl
Tiruchengode engineer married sweden girl
author img

By

Published : Feb 7, 2020, 4:39 PM IST

திருச்செங்கோடு நகரை அடுத்துள்ள சாணார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் தமிழரசி தம்பதியரின் மகன் தரணி. எம்டெக், எம்எஸ் படித்துள்ள இவர் சுவீடன் நாட்டில் டெஸ்ட் இன்ஜினியராகப் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எம்எஸ் படிக்கச் சென்றபோது, சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் பகுதியைச் சேர்ந்த மரினா சூசேன் என்பவரை, கூடைப்பந்து விளையாடும் இடத்தில் சந்தித்துள்ளார். தொடக்கத்தில் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், பின் காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.

Hindu marriage with foreign girl
Engineer Dharani with his family

பின்னர் மணமகள் வீட்டார், விருப்பப்படி கிறிஸ்தவ முறையில் திருமணமும், மணமகன் தரணி வீட்டார் விருப்பப்படி இந்து மத வழக்கப்படியும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

Hindu marriage with foreign girl
Engineer Dharani and Marina susan marriage had conducted by Christian Rituals

இதைத்தொடர்ந்து தரணி - மரினா சூசேன் ஜோடி, இந்து முறைப்படி ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றி தங்கச்சங்கிலி மற்றும் மோதிரம் அணிவித்து திருமணம் செய்து கொண்டனர்.

Hindu marriage with foreign girl
Engineer Dharani and Marina susan marriage had conducted by Hindu Rituals

இதன் பின்னர் சுவீடன் நாட்டு முறைப்படி ஒருவருக்கு ஒருவர் முத்தமிட்டுக் கொண்டனர்.

Hindu marriage with foreign girl
Sweden girl Marina susan with her family

இந்தத் திருமணத்தில் பெண் வீட்டாரின் உறவினர்கள் பட்டு வேட்டி, சட்டை மற்றும் பட்டு சேலை அணிந்து வந்திருந்தனர். சாதி, மதம், மொழி, நாடு கடந்து வென்ற இந்த காதல் திருமணம் சாணார்பாளையம் பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Tiruchengode engineer married sweden girl by both Hindu and Christian rites

Intro:சாதி, மதம், மொழி, நாடு கடந்து வென்ற காதல், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த வாலிபருக்கும் சுவீடன் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும் இந்து முறை மற்றும் கிறித்துவ முறைப்படி திருமணம் Body:திருச்செங்கோடு அடுத்துள்ள சாணார்பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகவேல் தமிழரசி தம்பதியரின் மகன் தரணி எம்டெக், எம்எஸ் படித்துள்ள இவர் சுவீடன் நாட்டில் டெஸ்ட் இன்ஜினியராக வேலைபார்த்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு எம்எஸ் படிக்க சென்ற போது சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்டாக்ஹோம் பகுதியை சேர்ந்த மரினா சூசேன் என்பவரை நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாட சென்ற இடத்தில் சந்தித்து நண்பர்களாக பழகி வந்த நிலையில் இவர்களிடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் மணமகள் வீட்டார் விருப்பப்படி கிறித்துவ முறை திருமணமும் மணமகன் தரணி வீட்டார் விருப்பப்படி இன்று இந்து மத வழக்கப்படியும் ஒருவருக்கு ஒருவர் மாலைமாற்றி தங்கசங்கிலி மற்றும் மோதிரம் அணிவித்து திருமணம் செய்து கொண்டனர்.பின்னர் வெளிநாட்டு முறைப்படி ஒருவருக்கு ஒருவர் முத்தமிட்டு கொண்டனர். இதில் பெண்வீட்டார் உறவினர்கள் பட்டு வேட்டி சட்டை மற்றும் பட்டு சேலை அணிந்து வந்திருந்தனர். வேற்று நாட்டுக்காரரை மணக்கும் போது இந்து முறைப்படியோ, அல்லது அவர்கள் சார்ந்துள்ள மத முறைப்படியோ தான் திருமணம் நடைபெறும் என்ற எந்த கருத்து முரண்பாடும் வராமல் தவிர்க்க இரு மதங்களிலும் நடந்த இந்த திருமணம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.