ETV Bharat / state

50 அடி பள்ளத்தில் விழுந்த கைப்பையை மீட்ட தீயணைப்புத் துறை! - Latest Namakkal News

நாமக்கல்: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் மலைக் கோயிலுக்கு செல்லும் பாதையில் 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்த கைப்பையை தீயணைப்புத் துறையினர் மீட்டு கொடுத்தனர்.

thiruchengode_bag_rescue_by_fire_department

author img

By

Published : Sep 15, 2020, 3:33 PM IST

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் யுவராஜ். சங்ககிரி சுங்கச்சாவடியில் பணியாற்றி வரும் இவர், தனது திருமண நாள் என்பதால் மனைவி அனிதா மற்றும் மகன் ரித்திக்ரோஷன் ஆகியோருடன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் மாட்டியிருந்த கைப்பை தவறி 50 அடி பள்ளத்தில் விழுந்தது. அதில் பணம், செல்போன் ஆகியவை இருந்ததால் திருச்செங்கோடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

கைப்பையை மீட்டுக் கொடுத்த தீயணைப்புத் துறை

இந்தத் தகவலறிந்து நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள், 50 அடி ஆழத்தில் கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கி கைப்பையை மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட கைப்பையை தீயணைப்புத் துறையினர் யுவராஜ் - அனிதா தம்பதியிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: குமரியில் நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாள் இளம்பெண் மாயம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.