கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வருகின்ற 22ஆம் தேதி மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து பிரதமரின் இந்த வேண்டுகோளுக்கு இணங்க, தமிழ்நாடு முழுவதும் ஐந்து லட்சம் லாரிகளும், 50 ஆயிரம் மணல் லாரிகளும் இயங்காது என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் அறிவித்துள்ளனர்.
பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் சார்பில் அன்றைய தினம் காலை ஆறு மணி முதல் நள்ளிரவு வரை வாகனங்களை இயக்கப் போவதில்லை என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் வாங்கிலி தெரிவித்தார்.
இதேபோல் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று 50 ஆயிரம் மணல் லாரிகளையும் இயக்கப் போவதில்லை என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'என் குடும்பத்துல இருக்குற மத்தவங்களுக்கு பரவக் கூடாது'; விருந்தினர் மாளிகையில் கரோனா பாதிக்கப்பட்ட மகனை மறைத்து வைத்த தாய்!