ETV Bharat / state

ரூ.200 கோடியை உடனடியாக ஆவின் நிர்வாகம் வழங்கவேண்டும் - Minister rajendrabalaji

நாமக்கல்: பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.200 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என ஆவின் நிர்வாகத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க பொது செயலாளர் முகமது அலி கோரிக்கை வைத்துள்ளார்.

milk-producers-meeting
author img

By

Published : Aug 24, 2019, 9:43 PM IST

நாமக்கல்லில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் மும்மது அலி கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ’தமிழ்நாடு அரசு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தியது பால் உற்பத்தியாளர்களுக்கு லாபம் அளிப்பதாக இல்லை. அந்த ரூ.4கூட 4.3 கொழுப்பு சத்தும், 8.2 இதர சத்தும் உள்ள பாலுக்கே கிடைக்கும். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள 75% பால் உற்பத்தியில் 4.0 கொழுப்பு சத்தும், 8.0 இதர சத்துதான் கிடைக்கிறது எனவே இது ஒட்டுமொத்த பால் கொள்முதல் விலையில் லாபத்தை தராது. எனவே பால் கொள்முதலை 50லட்சம் லிட்டராக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவை வைத்துள்ள ரூ.200 கோடியையும் உடனடியாக வழங்கவேண்டும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள பால் ஆரம்ப கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு பால் உற்பத்தியாளர்கள் பணத்திலிருந்து 2.5% ஊதியமாக வழங்கப்படுகிறது.

நிலுவையில் உள்ள ரூ.200 கோடியை உடனடியாக ஆவின் நிர்வாகம் வழங்கவேண்டும்

இதை ஆவின் நிர்வாகம்தான் அளிக்க வேண்டுமென ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் எனவே தமிழ்நாடு அரசு இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்றார்.

Intro:தீபாவளி காலங்களில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பால் உற்பத்தியாளர்களை பால் சொசைட்டியில் பட்டாசுகளை விற்பனை செய்யுமாறு நிர்ப்பந்தம் செய்வதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க பொது செயலாளர் முகமது அலி குற்றச்சாட்டுBody:தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. மாநில பொது செயலாளர் முகமது அலி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அண்மையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தியது, ஆவினில் உள்ள பிரச்சனைகள் குறித்து விவதாகிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முகமது அலி தமிழகத்தில் பால் கொள்முதல் விலை 4 ரூபாய் உயர்வு என்ற அறிவிப்பு 4.3 கொழுப்பு சத்துக்கும், 8.2 இதர சத்துக்கும் என்று இருந்தால் மட்டுமே கிடைக்கும், இது எந்த கறவை மாட்டிலும் கிடைக்காத பால் என்றும், பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2.50 முதல் 3 ரூபாய் வரை மட்டுமே கிடைக்கும் என்றும், இது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும், பால் கொள்முதலில் ஆவின் நிர்வாகம் ஐ.எஸ்.ஐ மற்றும் எம்.ஆர்.எப் என இருமுறைகளில் கொள்முதல் செய்து ஏமாற்றுவதாகவும், இந்தியா முழுவதும் உள்ளது போல் ஐ.எஸ்.ஐ முறையில் கொள்முதல் செய்ய வேண்டும், ஆவின் பால் கொள்முதலை 50 இலட்சம் லிட்டராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆவினில் உள்ள நிர்வாக சீர்கேட்டை போக்கினாலே பால் விற்பனை விலையை உயர்த்தாமலே பால் கொள்முதல் விலை உயர்வை வழங்க முடியும் என்றும், பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் நிர்வாகம் பாக்கி வைத்துள்ள 200 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும், மேலும் தீபாவளி காலங்களில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது உறவினர்களின் பட்டாசு ஆலைகளின் உற்பத்தியாகும் பட்டாசுகளை பால் உற்பத்தியாளர்கள் விற்பனை செய்யுமாறு நிர்பந்திப்பதாகவும் கூட்டுறவு சங்கங்களில் பட்டாசுகளை விற்பனை செய்வதை கைவிட வேண்டும் எனவும், ஆவினில் பணியாளர்கள் முறைகேடாக தகுதியில்லாதவர்கள் நியமினம் செய்யப்படுவதாகவும், இதனை தவிர்க்க ஆரம்ப சங்கங்களில் உள்ள தகுதியானவர்களை ஆவினில் பணி நியமனம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.