தமிழ்நாடு நெடுஞ்சாலை பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ், கரோனா காலக் கட்டத்தில் பணியாற்றும் சாலை பணியாளர்களுக்கு முகக் கவசம், சானிடைசர் வழங்கிட வேண்டும் என்றும் சாலை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தளவாட பொருள்களை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தி பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சாலை பணியாளர்களின் பதவி உயர்வுக்கான ஒட்டு மொத்த முதுநிலை பட்டியலை தமிழ்நாடு அரசின் சட்ட விதிகளுக்கு புறம்பாக நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் சசிகுமார் வெளியிட்டுள்ளளார். விதிமுறைகளை மீறி செயல்படும் சசிகுமார், அலுவலக கண்காணிப்பாளர் ராஜீ ஆகியோர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மாநிலம் முழுவதும் நவம்பர் 5ஆம் தேதி தமிழ்நாடு நெடுஞ்சாலை பணியாளர்கள் சங்கத்தினர் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட்ட என்டிசி ஊழியர்கள்