நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்த பாச்சல் பிரிவு சாலை அருகே உள்ள தனியார் பள்ளிக்கு பின்புறம் கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டடத்தின் முதல் மாடியில், உடல் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக பள்ளி நிர்வாகத்தினர், புதுசத்திரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அழுகிய நிலையிலிருந்து உடலை கைப்பற்றி, அவ்விடத்திற்கே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு உடற்கூறாய்வை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்த நபர் நொச்சிப்பட்டியைச் சேர்ந்த மோகன்ராஜ்(19) என்பதும், இவர் சேந்தமங்கலம் அரசு கல்லூரி மாணவர் என்பதும், ஒரு வாரத்திற்கு முன் வீட்டிலிருந்து காணாமல் போனதும் தெரியவந்தது.
பின்னர் இளைஞரின் உடலை அவரது பேற்றோர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர், உயிரிழந்த மோகன்ராஜ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தெலங்கானாவில் அதிர்ச்சி: பெண்ணுக்கு 139 பேர் பாலியல் வன்கொடுமை!