ETV Bharat / state

இரும்பாலை பாய்லர் வெடித்த விபத்தில் 9 பேர் படுகாயம்: 2 பேர் கவலைக்கிடம்

author img

By

Published : Nov 1, 2020, 5:12 PM IST

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே இரும்பாலை பாய்லர் வெடித்த விபத்தில் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இரும்பாலை பாய்லர் வெடிப்பு
இரும்பாலை பாய்லர் வெடிப்பு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கந்தம்பாளையம் அருகே நல்லூரில் அமைந்துள்ள இரும்பாலையில் நேற்று முன்தினம் (அக்.,30) பழைய இரும்புகளை உருக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென மிகுந்த சத்தத்துடன் பாய்லர் வெடித்தது.

இந்த விபத்தில் பாய்லர் அருகே வேலை செய்து கொண்டிருந்த கவுண்டிபாளையத்தை சேர்ந்த முருகேசன் மகன் பிரவின்குமார்(22), உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரின்ஸ்ராய் (26) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பிகார், உத்தரப் பிரதேச மாநிலங்களை சேர்ந்த 9 தொழிலாளர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது.

தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட இத்தொழிலாளர்கள் திருச்செங்கொடு, ஈரோடு, கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் பிரவின் குமார், பிரின்ஸ் ராய் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நல்லூரில் அமைந்துள்ள இந்த ஆலையில் பழைய இரும்புகளை உருக்கி இரும்பு கம்பிகளாக தயாரிக்கப்படுகிறது. இங்கு அமைந்துள்ள 2வது யூனிட்டில் வெளிமாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தனியார் ஷேர் மார்க்கெட் நிறுவனத்தில் தீ விபத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.