நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கான 5 கட்டடங்கள் 112 கோடியே 32 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலும், மருத்துவமனைக்கு கூடுதலாக ஒன்பது கட்டடங்கள் 157 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், இருப்பிடத்துக்கான 8 கட்டடங்கள் 69 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுவருகின்றன.
இந்தக் கட்டுமானப் பணிகளைத் தமிழ்நாடு சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "2021ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதிக்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்குத் தேவையான பணியாளர்களான மருத்துவர்கள், மருத்துவம் அல்லாத இதர பணியாளர்கள் ஆயிரத்து 340 பேர் தேவைப்படுகிறார்கள்.
தேவையான பணியாளர்களை அமர்த்துவது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துவருகிறார். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கரோனா பரவல் வேகமாக அதிகரித்துவருகிறது. அரசு அறிவித்த அனைத்துப் பாதுகாப்பு வழிமுறைகளை அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - ஸ்டாலின்