திண்டுக்கல் மாவட்டம், குறும்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர், சவரத் தொழிலாளி வெங்கடாசலம், ராஜலட்சுமி தம்பதியினர். இவர்களது 12 வயது மகளை கடந்தாண்டு அவருடைய எதிர் வீட்டுச் சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து, மின்சாரத்தை செலுத்தி கொலை செய்துள்ளார்.
இந்நிலையில், இவ்வழக்கு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் சிறுவன் மீதான குற்றம் சரியாக நிரூபிக்கப் படவில்லை என்ற காரணத்தினால் விடுதலை செய்யப்பட்டார். எனவே, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி வேண்டியும், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் உள்ள முடிதிருத்தும் கடைகளை அடைத்து இன்று போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று(அக்.9) நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1200 சலூன் கடைகளை அடைத்து சவரத்தொழிலாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: