ETV Bharat / state

2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அபகரித்த மகன்: மீட்டுத்தந்த கோட்டாட்சியர்!

நாமக்கல்: தந்தையை அடித்து துன்புறுத்தி இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரித்த மகனிடமிருந்து வருவாய் கோட்டாட்சியர் மீட்டு மீண்டும் முதியவரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

namakkal
namakkal
author img

By

Published : Jan 5, 2020, 9:49 AM IST

நாமக்கல் மாவட்டம் நடராஜபுரத்தில் வசிப்பவர் நல்லுசாமி (71). இவரது மகன் வாசுதேவன். இவர், தனது தந்தை என்றும் பாராமல் நல்லுசாமியின் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரித்து தனது மகன் பெயருக்கு எழுதி வாங்கியுள்ளார். இதன் பின்னர், தினந்தோறும் மதுபோதையில் முதியவர் நல்லுசாமியை அடித்து உதைத்து தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிகிறது.

இந்தச் சூழலில் நல்லுசாமியை வாசுதேவன் வீட்டைவிட்டு வெளியேறுமாறு கூறியதையடுத்து, மகனால் பாதிக்கப்பட்ட நல்லுசாமி நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் கோட்டைகுமாரை சந்தித்து இது குறித்து புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், வருவாய் கோட்டாட்சியர் கோட்டைகுமார் முதியவர் நல்லுசாமியின் மகன் வாசுதேவனிடம் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் வாசுதேவன் செய்தது தெரியவந்ததையடுத்து, பெற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்பு நலவாழ்வு சட்டத்தின் அடிப்படையில் வாசுதேவனிடமிருந்த இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை மீட்டு முதியவர் நல்லுசாமி பெயருக்கு மாற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நல்லுசாமியின் உயிருக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதியவரின் சொத்தை மீட்ட வருவாய் கோட்டாட்சியர்

மீட்கப்பட்ட சொத்துகள் தொடர்பான ஆவணங்களையும் வருவாய் கோட்டாட்சியர் சம்பந்தப்பட்ட முதியவரிடம் ஒப்படைத்தார். மேலும் வாசுதேவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் காவல் துறையினருக்குப் பரிந்துரைசெய்துள்ளார்.

இதையும் படிங்க: மகாத்மா காந்தியின் சிலை முற்றிலும் நாசம்; அம்ரெலியில் பரபரப்பு!

Intro:நாமக்கல் அருகே தந்தையை அடித்து துன்புறுத்தி 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்த மகன், சொத்துக்களை மகனிடமிருந்து மீட்டு மீண்டும் முதியவரிடம் ஒப்படைத்த வருவாய் கோட்டாட்சியர்

Body:நாமக்கல் அடுத்துள்ள நடராஜபுரத்தில் வசிப்பவர் நல்லுசாமி (71). இவரது மகன் வாசுதேவன் தனது 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்து வாசுதேவனின் மகன்  பெயருக்கு எழுதி வாங்கியதாகவும் மது அருந்திவிட்டு முதியவர் நல்லுசாமியை அடித்தும் தகாத வார்த்தைகளால் பேசி துன்புறுத்துவதாகவும் வீட்டை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்துவதாகவும் முதியவர் நல்லுசாமி நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் கோட்டைகுமாரிடம் புகார் அளித்திருந்தார். அதன்படி முதியவர் மகனிடம்  விசாரணை மேற்கொண்ட வருவாய் கோட்டாட்சியர் கோட்டைகுமார் முதியவரின் கோரிக்கையை ஏற்று பெற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்பு நலவாழ்வு சட்டத்தின் அடிப்படையில் முதியவரின் மகன் வாசுதேவன் வசம் இருந்த 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மீட்டு முதியவர் நல்லுசாமி பெயருக்கு மாற்றியும் முதியவர் நல்லுசாமியின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் போலீசார் அவரது வீட்டிற்கு ரோந்து பணியில் ஈடுபடவும் உத்தரவிட்டுள்ளார். மீட்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களையும் வருவாய் கோட்டாட்சியர் சம்பந்தப்பட்ட முதியவரிடம் ஒப்படைத்தார். மேலும் வாசுதேவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையினருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.