ETV Bharat / state

உயிரிழந்த தெரு நாய்க்குப் பேனர் வைத்து அஞ்சலி செலுத்திய மக்கள் - உயிரிழந்த தெரு நாய்க்கு பேனர் வைத்து அஞ்சலி செலுத்திய மக்கள்

நாமக்கல்: ராசிபுரத்தில் இறந்த தெருநாய்க்கு ஃபிளெக்ஸ்போர்டு வைத்து அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெரு நாய்க்கு பேனர் வைத்து அஞ்சலி செலுத்திய மக்கள்

author img

By

Published : Apr 10, 2021, 5:48 PM IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர், விநாயகர் கோயில் அருகே 'விக்கி' என்ற நாய் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேல் சுற்றித் திரிந்தது. விக்கி அப்பகுதி மக்களிடம் மிகுந்த பாசத்துடன் பழகி வந்தது.

அதிலும் இரவில் சந்தேகப்படும் வகையில் வரும் நபர்களைத் தெருவில், அனுமதிக்கவிடாமல் கூச்சலிட்டுப் பாதுகாத்து வந்துள்ளது. இதனால் திருடர் பயமின்றி அப்பகுதி மக்கள் நிம்மதியாக இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக, 'விக்கி' உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலிருந்தது. இதனால் அப்பகுதி இளைஞர்கள், விக்கியை கால்நடை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வந்தனர்.

தெரு நாய்க்குப் பேனர் வைத்து அஞ்சலி செலுத்திய மக்கள்

இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி நேற்று(ஏப்ரல்.09) மாலை, விக்கி உயிரிழந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சோகம் அடைந்தனர்.

தங்களது பகுதிக்குக் காவலனாக இருந்த, 'விக்கி' நாய் இறந்த சோகத்தை தாங்க முடியாத அப்பகுதியினர், விக்கிக்குக் கண்ணீர் அஞ்சலி ஃபிளெக்ஸ்போர்டு வைத்தனர். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.