நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடுபோவதாக காவல்துறையினருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தனர்.
![வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தவர்கள் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-nmk-03-rasipuram-bike-theft-arrested-script-vis-tn10043_09022021194745_0902f_1612880265_303.jpg)
விசாரணையில், ஆத்தூர் அடுத்த சிறுவாச்சூரை சேர்ந்த ரவிக்குமார், பரமத்தி வேலூரை சேர்ந்த பூபாலன் (22) என்பது தெரிந்தது. இவர்கள் கங்கவள்ளியை சேர்ந்த தனபால் (23), கோபிநாத் (22) ஆகியோருடன் சேர்ந்து சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பல இடங்களில், இருந்து வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடமிருந்து 11 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன், 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் கைது - 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!