ETV Bharat / state

கோழிப்பண்ணையாளர்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி வாங்க வேண்டும்; நாமக்கல் ஆட்சியர் உத்தரவு! - நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் குறைந்தபட்சம் 5,000 முதல் அதற்கு மேல் கோழிகள் வைத்துள்ள அனைத்து கோழிப் பண்ணையாளர்களும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் அனுமதி பெற்றே இயங்க வேண்டும் என நாமக்கல் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

கோழிப்பண்ணையாளர்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி வாங்க வேண்டும்; நாமக்கல் ஆட்சியர் உத்தரவு

author img

By

Published : Jul 26, 2022, 10:45 PM IST

நாமக்கல்: முட்டை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது நாமக்கல் தான். அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் 6 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

கோழிப்பண்ணையாளர்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி வாங்க வேண்டும்; நாமக்கல் ஆட்சியர் உத்தரவு
கோழிப்பண்ணையாளர்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி வாங்க வேண்டும்; நாமக்கல் ஆட்சியர் உத்தரவு

அவற்றுள் கேரளாவுக்கு தினசரி 2 கோடி முட்டைகளும் தமிழ்நாடு அரசின் சத்துணவு திட்டத்திற்கு தினசரி 45 லட்சம் முட்டைகளும் அனுப்பி வைக்கப்படும் நிலையில் மீதமுள்ள முட்டைகள் தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் சில்லறை மற்றும் மொத்த விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இத்தொழிலில் நேரிடையாகவும் மறைமுகமாகவும் ஒரு லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோழிப் பண்ணைகளை நடத்துவதற்கு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அண்மையில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் பண்ணைகள் இருக்க வேண்டும். பண்ணையைச்சுற்றி சுற்று சுவர் அமைத்திட வேண்டும். துர்நாற்றம் வீசாமல் பண்ணையைப் பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இதன்கீழ் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியமும் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனடிப்படையில் தமிழ்நாட்டில் அதிகளவு கோழிகள் வளர்க்கப்படும் பண்ணையாளர்களுக்கும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் குறைந்தபட்சம் 5,000 முதல் அதற்கு மேல் எண்ணிக்கை உள்ள கோழிகள் வைத்துள்ள அனைத்து கோழிப் பண்ணையாளர்களும், புதியதாக கோழிப்பண்ணை அமைப்பவர்களும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் அனுமதி பெற்றே இயங்க வேண்டும் எனவும், இந்த உத்தரவு வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே 25 ஆயிரம் கோழிகளுக்கு மேல் வைத்துள்ள பண்ணைகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை இருந்து வரும் நிலையில், தற்போது அவை 5ஆயிரம் கோழிகளுக்கு மேல் வைத்துள்ள பண்ணைகளும் அனுமதி பெற வேண்டும் என மாற்றி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'வருமான நோக்கத்திற்காக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது' - முன்னாள் மின்துறை அமைச்சர் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.