மத்திய முன்னாள் இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய அவர், "நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றதால் இதனைக் கொண்டாடும்விதமாகவும் அப்பகுதி மக்களுக்கு பரிசளிக்கும்விதமாகவும் வரும் 26, 27, 28 ஆகிய மூன்று தினங்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடி மதுவில்லாத தீபாவளியைக் கொண்டாட தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், நாங்குநேரி தொகுதி மக்களை காங்கிரஸ் கட்சி ஏமாற்றியதால்தான் தற்போது படுதோல்வி அடைந்தது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழர்கள் பண்டிகை காலங்களில்கூட வேட்டி சட்டைகள் அணியவிரும்புவதில்லை எனக் கூறிப்பிட்ட அவர், ஆனால் பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் வேட்டி சட்டை அணிந்ததையடுத்து தமிழர்கள் இந்தத் தீபாவளி பண்டிகையின்போது கட்டாயம் வேட்டி சட்டை அணிவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி!