நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்திப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சார்ந்த நால்வர் தீக்குளித்து பலியாகினர்.
அதனால், அனைத்து மாவட்ட நிர்வாகத்திலும் மனு அளிக்க வரும் பொதுமக்கள் தீவிர சோதனைக்கு பிறகே ஆட்சியரை சந்திக்க வேண்டும் என நிபந்தனை உள்ளது. அதன் அடிப்படையில், ஆண்களை ஆண் காவலர்களும், பெண்களை பெண் காவலர்களும் தனி அறையில் வைத்து சோதனை செய்கின்றனர்.
இந்நிலையில், பெண்களை சோதனை செய்யும் சாவடி கடந்த வாரம் பெய்த மழையால் முற்றிலும் சாயந்தது. இதனை மாவட்ட நிர்வாகம் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறது. இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.