நாமக்கல்: பேளுக்குறிச்சி பகுதியில் பிரசித்திப் பெற்ற அருள்மிகு ஶ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலானது நூற்றாண்டுகள் பழமையானது. கடந்த 1988ஆம் முன்பு பேளுக்குறிச்சியைச் சேர்ந்த அனைத்து சமூதாய மக்களும் ஒன்றாக வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கோயிலுக்குச் சொந்தமாக 14 ஏக்கர் நிலம் உள்ளது. இதனால் 1989-ஆம் ஆண்டில் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
இதனால், ஒரு தரப்பினர் மற்ற தரப்பினர் யாரும் கோயிலுக்குள் வரக்கூடாது என தகராறு செய்தனர். கோயில் பண்டிகையின் போது பட்டியிலின மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் போது ஒரு தரப்பினர் தகராறு செய்து மிக பெரிய அளவில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் 1989ஆம் ஆண்டு முதல் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இதற்கிடையில், பட்டியலின மக்கள் தரப்பில் 2017ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த விவகாரத்தின் தீவிரத்தை அறிந்த மாவட்ட நிர்வாகம் தினசரி கோயிலில் உள்ள சுவாமிக்கு பூஜை செய்ய பூசாரிக்கு மட்டும் அனுமதி வழங்கியது. அதுவும் பூஜை செய்து பிறகு கோயிலின் சாவியை பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் ஒரு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அனைத்து சமூதாயத்திரும் கோயிலுக்குள் சென்று வழிபடலாம் ஆனால் திருவிழா மட்டும் நடத்தக் கூடாது எனவும் இடைக்கால உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுபடி தங்களை கோயிலுக்காக அனுமதிக்க வேண்டுமென பட்டியலின மக்கள் பலமுறை கோயிலுக்குள் நுழைய முயன்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் பட்டியலின மக்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வந்தனர். இந்த சூழலில் இன்று (செப்.07) காலை பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழைய முற்பட்டனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் நிலையில் 100க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் கோயிலின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
பிரச்னை மிக பெரிய அளவில் வெடிக்கும் என கருதிய காவல் துறையினர் மக்களிடம் இன்று வேண்டாம், மற்றொரு நாளில் கோயிலுக்குள் நுழைய அனுமதி வழங்குவதாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் விடாப்படியாக இருந்த பட்டியிலின மக்கள் இன்றே மாரியம்மன் கோயிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்வோம் என உறுதியாக இருந்தனர். இதனையடுத்து காவல் துறை, வருவாய்த்துறை மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் பட்டியலின மக்கள் மட்டும் கோயிலுக்குள் அனுமதித்தால் பிரச்னை ஏற்படும் எனவும் மற்ற சமூகத்தினர் அனைவரையும் அழைத்து வந்து கோயிலுக்குள் நுழைய முயற்சி செய்தனர். அதன்படி மற்ற சமூகத்தினருடன் பட்டியலின மக்களும் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி கோயிலின் சாவியை பூசாரி காவல் நிலையத்தில் வழங்காமல் சாவியை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டார். இதனால் கோயிலின் சாவி இல்லாததால் அறநிலையத்துறை, காவல் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் கோயிலின் பூட்டானது உடைக்கப்பட்டும் கருவறையின் பூட்டும் உடைக்கப்பட்டு பட்டியலின மக்கள் தேங்காய் பழத்துடன் சூடம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். இதனால் 30 ஆண்டுகளாக கோயிலுக்குள் அனுமதிக்கப்படாமல் இருந்த பட்டியிலின சாமி மக்கள் இன்று கோயிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்தது அவர்களுடைய பெரிய பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "இந்துக் கோயிலை பராமரித்த இஸ்லாமிய வணிகக் குழு" - தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கூறும் அரிய தகவல்