ETV Bharat / state

'ரூ.70 ஆயிரம் கொடு... இல்லையென்றால் மொத்த தகவல்களையும் அழித்து விடுவோம்' - முதியவரை மிரட்டும் ஹேக்கர் கும்பல் - photo and video editor computer hacked

நாமக்கல்: முதியவரின் கணினியை முடக்கிய அடையாளம் தெரியாத நபர்கள், 70 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே கணினி சரிசெய்து தரப்படும் என்றும் இல்லையென்றால் கணினியில் உள்ள தகவல்கள் அனைத்தும் அழிக்கப்படும் எனவும் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டச் செய்திகள்  பரமத்தி வேலூர் செய்திகள்  photo and video editor computer hacked  photo editor computer hacked
முதியவரின் கணினி முடக்கம்
author img

By

Published : Feb 5, 2020, 9:14 AM IST

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகேயுள்ள நன்செய் இடையாறைச் சேர்ந்தவர் சண்முகம் (60). இவரது இரு மகன்களும் வெளிநாட்டில் பணிபுரிந்துவரும் நிலையில், தனது அன்றாடத் தேவைக்காக தனது வீட்டிலேயே கணினி ஒன்றின் மூலமாக புகைப்படம், வீடியோ எடிட்டிங் வேலைசெய்துவருகிறார்.

இந்தத் துறையில் அனுபவம்வாய்ந்தவரான இவர், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த புகைப்பட ஸ்டூடியோ மற்றும் வீடியோ எடுக்கும் நபர்களுக்கு ஆல்பம் தயாரித்துக் கொடுத்து அதற்கு கட்டணமும் பெற்றுவருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் இவர் தனது கணினியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அது என்ன தகவல் என்று பார்க்க உள்நுழையும்போது இவரது கணினி முற்றிலும் முடங்கியது.

முதியவரின் கணினி முடக்கம்

இதனைத்தொடர்ந்து வந்த மற்றொரு குறுந்தகவலில் வரும் 72 மணி நேரத்தில் 490 டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 70 ஆயிரம் ரூபாய்) செலுத்தினால் மட்டுமே கணினி சரிசெய்து தரப்படும் எனவும் பணம் செலுத்தாவிட்டால் கணினியிலுள்ள அனைத்து விவரங்களும் அழிக்கப்படும் என்றும் அடையாளம் தெரியாத நபர்களால் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இதனால் சண்முகம் செய்வதறியாமல் தவித்துவருகிறார். இதுபோன்று கணினிகள் முடக்கப்பட்டு பணம் பறிக்கும் செயல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக புகைப்பட ஸ்டூடியோ வைத்திருப்பவர்களின் கணினிகள் பெரும்பாலும் முடக்கப்படுகின்றன. இது மக்கள் மத்தியிலும் பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதையும் படிங்க: மாநகராட்சி குடிநீர் குழாயில் சோப்பு போட்டு குளித்த சமூக ஆர்வலர்...

Intro:நாமக்கல் அருகே 60வயது முதியவரின் கணினி மர்ம நபர்களால் முடக்கம், மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி வேண்டுகோள்
Body:நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு சேர்ந்த சண்முகம்(60). இவரது இரு மகன்களும் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில் தனது அன்றாட தேவைக்காக தனது வீட்டிலேயே கணினி ஒன்றின் மூலமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் வேலை செய்து வந்தார். போட்டோ மற்றும் வீடியோ தொழில் துறையில் அனுபவம் வாய்ந்தவர். சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த போட்டோ ஸ்டூடியோ மற்றும் வீடியோ நபர்களுக்கு போட்டோ எடிட்டிங் மட்டும் ஆல்பம் தயாரிப்பு மற்றும் வீடியோ எடிட்டிங் மென்பொருள் செய்துகொடுத்து அதற்குரிய கட்டணம் பெற்றும் வருகிறார்.

இந்நிலையில் நேற்று கடந்த 3ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் இவர் தனது கணினியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது ஒரு குறுந்தகவல் செய்தியாக வந்தது. அதை என்னவென்று பார்க்க அதனுள் நுழையும் போது இவரது கணினி முற்றிலும் முடங்கியது. மேலும் மற்றொரு குறுந்தகவல் இவருக்கு வந்தது. அதில் வரும் 72 மணி நேரத்தில் 490 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 70 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் மட்டுமே கணினி சரி செய்து தரப்படும் எனவும் பணம் செலுத்தாவிட்டால் கணினியில் உள்ள அனைத்து விவரங்களும் அழிக்கப்படும் என மர்ம நபர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் செய்வதறியாமல் முதியவர் சண்முகம் விழிபிதுங்கி உள்ளார். மேலும் இந்தியாவில் தற்போது இதுபோன்று கணினிகள் முடக்கப்பட்டு பணம் பறிக்கும் செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அனைவரும் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு மர்மகும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்‌.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.