நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன. மேலும் அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்லவும் நோய் தடுப்புப் பணிகளில் ஈடுபட அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கையொப்பம் பெற்ற அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த கொல்லிமலை அடிவாரமான காளப்பநாயக்கன்பட்டியில் மூவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக கொல்லிமலையைச் சேர்ந்த 14 ஊராட்சிகளைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் கொல்லிமலைக்கு எவ்வித வாகனங்களும் வருவதை அனுமதிக்கக்கூடாது எனவும் பலர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டதாகக் கூறி போலி அடையாள அட்டையை வாகனங்களில் ஒட்டி மலைக்கு வருவதாகவும் கூறினர்.
இதனை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அவ்வாறு வரும் வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் கரோனா தொற்று முழுமையாக நீங்கும் வரை வாகனங்கள் கொல்லிமலைக்கு வருவதற்கு அனுமதிக்கக்கூடாது எனக் கூறி கொல்லிமலைக்கு வரும் வாகனங்கள் அனைத்தையும் சோதனை சாவடி அருகே திரும்பி செல்லவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க... கொல்லிமலையில் அனுமதியின்றி செயல்படும் கிரஷர் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?