நாமக்கல் மாவட்டம், வண்டிக்காரன் தெருவைச் சேர்ந்தவர் மரகதம். இவர் இன்று மதியம் இரண்டு மணியளவில், ரங்கர் சன்னதி தெருவிலுள்ள இந்தியன் வங்கியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பணப்பையுடன் வெளியே வந்துள்ளார்.
அப்போது, வங்கியின் வெளியே நின்றுகொண்டிருந்த இரண்டு நபர்கள், திடீரென அப்பெண் வைத்திருந்த பணப்பையை பிடுங்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனைத் தடுக்குமாறு அப்பெண் அலறியடித்து கூச்சலிட்டும், கொள்ளையர்கள் வேகமாக ஓடிச்சென்றுவிட்டனர். பின்னர் இச்சம்பவம் குறித்து அவர் நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் ஒருவரிடமிருந்து பணத்தைப் பிடுங்கிக்கொண்டு ஓடிய இரு நபர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாதா ஆலயத்தில் கீரிடம், நெக்லஸ் திருட்டு - போலீஸ் வலைவீச்சு!