ETV Bharat / state

ரஜினியைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை - ஈஸ்வரன்

நாமக்கல்: ரஜினியைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை என்றும், ரஜினியால் திமுக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனவும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Dec 5, 2020, 2:21 PM IST

KMDK Eswaran Press Meet
KMDK Eswaran Press Meet

நாமக்கல்லில் நடைபெற்ற வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பங்கேற்றார். அப்போது, செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், "அனைத்து மாநில விவசாயிகளும் டெல்லியை நோக்கி படையெடுத்தால் நிலை என்னவாகும் என யோசித்து மத்திய அரசு உடனடியாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும், வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்யும் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும், விவசாயிகளை பாரமாக நினைத்தால் அதன் பாதிப்பை சந்தித்து ஆக வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ரஜினி கட்சி தொடங்கவுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஈஸ்வரன், "யார் வேண்டுமானலும் கட்சி தொடங்கலாம். அதிமுகவில் உள்ளதுபோல் தங்கள் கூட்டணியில் இரண்டு நிலைப்பாடு இல்லை. தற்போது ரஜினியைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை, ரஜினியால் திமுக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை" எனத் தெரிவித்தார்.

முதலமைச்சரின் தேவேந்திர குல வேளாளர் அறிவிப்பு குறித்த கேள்விக்கு, "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் அவசரப்பட்டிருக்கக் கூடாது, ஆலோசித்து முடிவெடுத்திருக்கலாம்" என்றார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன்

மேலும் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பாமக நிறுவனர் ராமாதாஸின் கோரிக்கை குறித்து கேட்டபோது, "ஒரே சமூகத்திற்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டால் மற்றவர்கள் அநாதை ஆக்கப்படுவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலளிக்க வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: 2021 இல் மீண்டும் ஆட்சி - ஜெயலலிதா நினைவு நாளில் அதிமுக உறுதிமொழி!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.