ETV Bharat / state

"NO HELMET - NO ENTRY" அசத்தும் காவல்துறையினர்; விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்! - தலைகவசம்

நாமக்கல்: இருசக்கர வாகனத்தின் பயன்பாடு எதிர்பாராத அளவில் அதிகரித்துள்ள நிலையில், வாகன விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, மாவட்டம் முழுவதும் போக்குவரத்து காவல்துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

NO HELMET - NO ENTRY
author img

By

Published : Jun 27, 2019, 9:38 PM IST

சாலை விபத்தில் இறப்பவர்கள் பெரும்பாலும் தலைக்கவசம் அணியாதவர்கள் என்பது ஒரு நிதர்சனமான உண்மை. இருசக்கர வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள், தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் பயணிக்க வேண்டும்.

புதிய முயற்சி:

இதனை வலியுறுத்தி சாலைப் பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில், நாமக்கல் மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளர் அருளரசு, அவர்களின் முயற்சியாக மாவட்டத்தில் உள்ள முக்கிய நகர்ப்புற காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலும், நகருக்குள் ஒரு பகுதி வீதம் தினந்தோறும் தேர்வு செய்யப்பட்டு, தினசரி காலை, மாலை என இருவேளை நேரங்களிலும், அந்தந்த இடங்களில் "NO HELMET NO ENTRY" (தலைக்கவசம் இல்லையேல், நீங்கள் செல்ல வழியில்லை) என்ற வாசகம் அடங்கிய எச்சரிக்கை பதாகைகளை வைக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத மற்றும் திடீர் வாகன தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களைத் தணிக்கை செய்து, அவ்வழியாகச் செல்லாமல் தடுக்கப்பட்டு, மாற்று வழியில் செல்லவும், தலைக்கவசம் அணிந்து வாகனத்தை இயக்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

போக்குவரத்து காவல்துறையின் சீரிய ஏற்பாடு:

இதுகுறித்து நாமக்கல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கிட்டு பேசுகையில் "நாமக்கல் மாவட்ட காவல்துறையின் இம்முயற்சியினால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதுடன் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது, கூடுதலாக 20% பேர் தலைக்கவசம் அணிந்து வரத் தொடங்கியுள்ளனர். இனிவரும் நாட்களில், இது அதிகரிக்கும். காலையில் தணிக்கை செய்வதால் பெரும்பாலும் அலுவலகத்திற்குச் செல்பவர்கள் தலைக்கவசம் அணியாமல் வருவதால், அவர்களை நகருக்குள் அனுமதிக்காமல், திருப்பி அனுப்பப்படுவதால், அடுத்த நாள் முதல் தலைக்கவசம் அணிந்து வருகின்றனர். ஒரு சிலர் காவல்துறையினரைக் கண்ட பின் தான் தலைக்கவசம் அணிகின்றனர். அதுவும் ஒரு குற்றமாகும். தற்போது பொதுமக்களிடையே அதிகளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது’ என்கிறார்.

வாகன ஓட்டிகளின் கருத்து:

பொதுமக்களிடையே இதுகுறித்து பேசுகையில், "தலைக்கவசம் அணிவது நம்முடைய பாதுகாப்பை உறுதி செய்வதாகும். பெரும்பாலும் காவல்துறையினர் தலைக்கவசம் அணியவில்லை என்றால், உடனடியாக அபராதம் செலுத்த உத்திரவிடுவார்கள். ஆனால் தற்போது அபராதத்தைக் கைவிட்டு, நகருக்குள் நுழையத் தடை என்பது மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. நாமக்கல்லில் தலைக்கவசம் அணிந்து வாகனத்தை இயக்குவோரின் எண்ணிக்கை, அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர். காலையில் தணிக்கையில் ஈடுபடுவதால், பெரும்பாலும் அலுவலகத்திற்குக் குறித்த நேரத்திற்குள் செல்லவேண்டும் என்பவர்கள், தலைக்கவசம் அணியாமல் வருவதால், நகருக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. நகரைச் சுற்றிவர வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் குறித்த நேரத்திற்குள் செல்ல இயலாமல் அவதிக்குள்ளாகின்றன. தற்போது, தொடர்ந்து ஒருவார காலமாக இவ்வாறு செல்வதால், அனைவரும் தலைக்கவசம் அணியவேண்டும் என்ற மனநிலைக்குத் திரும்பி உள்ளதாக" கூறுகின்றனர்.

Intro:நாமக்கல்லில் "NO HELMET NO ENTRY" அசத்தும் காவல்துறையினர், விழி பிதுங்கும் வாகனயொட்டிகள்

Body:இருசக்கர வாகனத்தின் பயன்பாடு எதிர்பார்க்காத அளவில் அதிகரித்துள்ள நிலையில் இரு சக்கர வாகன விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் தவிர்க்கவும் வேண்டி நாமக்கல் மாவட்டம் முழுவதும் காவல் துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

"NO HELMET NO ENTRY"

சாலை விபத்தில் இறப்பவர்கள் பெரும்பாலும் தலைக்கவசம் அணியாதவர்கள் என்பது ஒரு நிதர்சனமான உண்மை. இருசக்கர வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் பின் இறக்கைகள் அமர்ந்து இருப்பவர்கள் தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனத்தை பயணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளர் அருளரசு அவர்களின் முயற்சியாக மாவட்டத்தில் உள்ள முக்கிய நகர்ப்புற காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலும் நகருக்குள் ஒரு பகுதி வீதம் தினந்தோறும் தேர்வு செய்யப்பட்டு தினசரி காலை மாலை என இருவேளை நேரங்களிலும் அந்த இடங்களில் "NO HELMET NO ENTRY" என்ற வாசகம் அடங்கிய எச்சரிக்கை பதாகைகளை வைத்து எதிர்பாராத மற்றும் திடீர் வாகன தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களை தணிக்கை செய்து தலை கவசம் அணியாமல் செல்பவர்களை அவ்வழியாக செல்லாமல் தடுக்கப்பட்டு மாற்று வழியில் செல்லவும் மேலும் ஹெல்மெட் அணிந்து வாகனத்தை இயக்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நாமக்கல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கிட்டு பேசுகையில் "நாமக்கல் மாவட்ட காவல்துறையின் இம்முயற்சியினால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருப்பதுடன் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டதாகவும் தற்போது கூடுதலாக 20 சதவீதம் பேர் தலைக்கவசம் அணிந்து வர தொடங்கியுள்ளதாகவும் இது வரும் நாட்களில் அதிகரிக்கும் எனவும் காலையில் தணிக்கை செய்வதால் பெரும்பாலும் அலுவலகத்திற்கு செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் வருவதால் அவர்களை நகருக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்படுவதால் அடுத்த நாள் முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வருகின்றனர். ஒரு சிலர் போலீசாரை பார்த்தவுடனே தான் ஹெல்மெட் அணிகின்றனர். அதுவும் ஒரு குற்றமாகும். தற்போது பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கிட்டு".

பொதுமக்களிடையே இதுகுறித்து பேசுகையில் " தலைகவசம் அணிவது நம்முடைய பாதுகாப்பை உறுதி செய்வதாகும். பெரும்பாலும் காவல்துறையினர் ஹெல்மெட் அணியவில்லை என்றால் உடனடியாக அபராதம் செலுத்த உத்திரவிடுவார்கள். ஆனால் தற்போது அபராதத்தை கைவிட்டு நகருக்குள் நுழைய தடை என்பது மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளதாகவும் நாமக்கல்லில் ஹெல்மெட் அணிந்து வாகனத்தை இயக்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர். காலையில் தணிக்கையில் ஈடுபடுவதால் பெரும்பாலும் அலுவலகத்திற்கு குறித்த நேரத்திற்குள் செல்லவேண்டும் என்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் வருவதால் நகருக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. நகரை சுற்றிவர வேண்டியுள்ளது. அனால் அவர்கள் குறித்த நேரத்திற்குள் செல்ல இயலாமல் அவதிக்குள்ளாகின்றன. தற்போது தொடர்ந்து ஒருவாரகாலமாக இவ்வாறு செல்வதால் தற்போது அனைவரும் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற மனநிலைக்கு திரும்பி உள்ளதாகவும் தெரிவித்தனர்".

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.