ETV Bharat / state

பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்த வேட்பாளருக்கு எச்சரிக்கை - நாமக்கல் உள்நாட்டு செயல்முறை விளக்கம் வேட்பாளர் எச்சரிக்கை

நாமக்கல் : வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்த வேட்பாளர் ஒருவரை எச்சரித்த காவல் துறையினர், அவர் வைத்திருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.

namakkal ballot voting demonstration, namakkal demonstration,
namakkal ballot voting demonstration
author img

By

Published : Dec 28, 2019, 10:23 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் 8 ஒன்றியங்களுக்கான முதல்கட்ட தேர்தல் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தை அடுத்து, மாவட்டத்தில் உள்ள மற்ற 7 ஒன்றியங்களுக்கும் இரண்டாம் கட்டமாக வரும் திங்கள்கிழமை (30ஆம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், புதுசத்திரம் ஊராட்சி ஒன்றிய குழுவின் 13ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்காக செல்லப்பம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். இவர் உள்ளாட்சித் தேர்தல்களில் நான்கு வகையாக வாக்கு சீட்டுகளை வைத்து எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் அருகே இன்று காலை செயல் விளக்கம் அளித்தார்.

இதனையறிந்து அங்கு வந்த நல்லிபாளையும் காவல் ஆய்வாளர் கைலாசம் தலைமையிலான காவல் துறையினர், மாதிரி வாக்குப்பதிவு முறைகள் குறித்து பொதுமக்களுக்கு தனி நபர் யாரும் எவ்வித விளக்கமும் அளிக்கக்கூடாது எனக் கூறி அவர் கொண்டுவந்த மாதிரி வாக்குப்பெட்டி, வாக்குச் சீட்டுகள், சீல் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

வேட்பாளரிடமிருந்து மாதிரி வாக்குச்சீட்டுகள் உட்வற்றை பறிமுதல் செய்யும் காவல் துறையினர்

மேலும், இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடக்கூடாது என ரமேஷை காவல் துறையினர் எச்சரித்தனர்.

இதையும் படிங்க : உயிர் குடிக்கும் மாசு!

Intro:உள்ளாட்சி தேர்தலில் 4 வாக்கு சீட்டுகளை எவ்வாறு மடித்து ஒவ்வொன்றாக பெட்டியில் எவ்வாறு போட வேண்டும் என மாதிரி வாக்கு பெட்டியுடன் செயல் விளக்கம் அளித்த வாக்கு பெட்டி, வாக்கு சீட்டுகளை நல்லிபாளையம் போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை.
Body:நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய குழுவின் 13-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு செல்லப்பம்பட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். இவர் வாக்குபதிவு எந்திரத்தில் வாக்களித்து பழகி விட்ட பாமர மக்கள். உள்ளிட்ட பொதுமக்கள் இப்போது 4 வாக்கு சீட்டுக்களை பயன்படுத்தி எவ்வாறு முத்திரை சீல் கட்டை மூலம் வாக்குகளை பதிவு செய்யும் முறையில் சற்று தடுமாறும் நிலை உள்ளதால், வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் முறை குறித்து 4 வகையான வாக்கு சீட்டையும் காட்டி நான்கிலும் சீல் வைப்பது எப்படி அவைகளை எப்படி மடிப்பது என்று வாக்காளர்களுக்கு குறிப்பாக வயதானவர்களுக்கு செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோவில் மாரியம்மன் கோவில் அருகே செயல்விளக்கம் செய்து காட்டிகொண்டு இருந்தார். அப்போது முத்திரை இடப்பட்ட வாக்கு சீட்டுக்களை நானகையும் எவ்வாறு மடித்து ஒவ்வொன்றாக பெட்டியில் எப்படி போட வேண்டும் என்று காட்டுவற்க்காக ஒரு அட்டையால் அவர் செய்து கொண்டு வந்து அந்த மாதிரி வாக்கு பெட்டியில் போடுவது எப்படி என்று காட்டிக் கொண்டு இருந்தார். இதனை அறிந்த அங்கு வந்த நல்லிபாளையம் காவல் ஆய்வாளர் கைலாசம் தலைமையிலான காவல்துறையினர் மாதிரி வாக்குபதிவு முறைகள் குறித்து பொதுமக்களுக்கு தனிநபர் எவ்வித விளக்கமும் அளிக்க கூடாது என கூறி மாதிரி வாக்கு பெட்டி மற்றும் மாதிரி வாக்கு சீட்டுக்கள், சீல் வைக்கும் சீல் கட்டை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து அவற்றை எடுத்து சென்றனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.