ETV Bharat / state

சரிந்த பள்ளி சுற்றுச்சுவர் - செங்கல்லை கையால் பெயர்த்தெடுத்த எம்.பி.

author img

By

Published : Oct 10, 2020, 12:20 PM IST

நாமக்கல்: சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த பள்ளி சுற்றுச்சுவரை மீண்டும் தரத்தோடு கட்ட வேண்டுமென நாமக்கல் எம்.பி. ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டுள்ளார்.

chinraj
chinraj

நாமக்கல் மாவட்டம் பவித்ரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 38 லட்ச ரூபாய் மதிப்பில் பள்ளிக்குச் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை நாமக்கல் மக்களவை உறுப்பினரும், மத்திய ஊரக வளர்ச்சித்துறை நிலைக் குழு உறுப்பினருமான ஏ.கே.பி.சின்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, சுற்றுச்சுவர் கட்டும் பணியில் கட்டுமான பொருள்கள் தரமில்லாமல், சிமெண்ட்டின் அளவு குறைவாக கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. செங்கல்கள் சீட்டுக்கட்டுபோல் வேகமாக சரிந்து விழுந்து மோசமாக காணப்பட்டது. இதனையடுத்து, கட்டப்பட்ட சுவர்களை முற்றிலும் அப்புறப்படுத்தி, நல்ல தரத்தோடு சுவரை கட்ட வேண்டுமென ஒப்பந்ததாரருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

சீட்டுக்கட்டு போல் சரிந்த பள்ளி சுற்றுச் சுவர்

அலுவலர்கள் பணிகள் முறையாக தரத்தோடு நடைபெறுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ரூ.1 கோடி மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்: குடோனுக்கு சீல்வைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.