நாமக்கல்லில் தமிழ்நாடு கோழி பண்ணையாளர் சங்கத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.கே.பி. சின்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் அவர், "கொரோனா வைரஸ் இறைச்சிகள் மூலம் பரவுகிறது என சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரவிவருகிறது. அதனால், இந்திய அளவில் கோழி இறைச்சி, முட்டை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
அதனால் ஆந்திராவில் குறைந்த விலைக்கு கோழி இறைச்சியை விற்பனை செய்தும், அதுகுறித்து விழிப்புணர்வும் எடுத்துவருகின்றனர். அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில், விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக விரைவில் சிக்கன், முட்டை மேளா நடத்தப்படும். அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறது. ஒரு வாரம் பத்து நாள்களில் நடைபெற வாய்ப்புள்ளது" என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், 'தற்போது இருப்பிலுள்ள கோழிகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுவருகிறது. கொரோனா வதந்திகளால் முட்டை விலை நாள் ஒன்றுக்கு ரூ.2.10 காசுகளும், கறிக்கோழி 42 ரூபாயும் நஷ்டமடைகிறது' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோழிக்கறிக்கும் கொரோனாவுக்கும் என்ன சம்பந்தம்? - விளக்குகிறார் குழந்தைசாமி