ETV Bharat / state

நாமக்கல் கவிஞரின் 132ஆவது பிறந்தநாள் : மலர் தூவி மரியாதை

நாமக்கல் : கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் 132ஆவது பிறந்த நாளையொட்டி அவரது நினைவு இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Ramalingam
Ramalingam
author img

By

Published : Oct 19, 2020, 12:42 PM IST

"கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது..." "தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அதற்கொரு குணமுண்டு", "கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கிலை ஒத்துக்கொள்" என்பன போன்ற பல்வேறு வீரியமிக்க வரிகளின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களிடையே சுதந்திர உணர்வை ஏற்படுத்தியவர் தேசியக் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை.

இன்று (அக்.19) அவரது 132ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை தெருவில் அவரது நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ், நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து, நாமக்கல் கவிஞர் இயற்றிய விடுதலை உணர்வுகளைத் தூண்டக்கூடிய பாடல்களை பாடி இளைஞர்கள் அவரை வணங்கினர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் மெகராஜ், நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஆகியோர் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் அவர் இயற்றிய புத்தகங்களை பார்வையிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.